பட்டிப்பளைப் பிரதேசத்தில் சூடு பிடிக்கும் உள்ளுராட்சி தேர்தல்.

0
571

(படுவான் பாலகன்) உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து, மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு வேட்பாளர்களை தெரிவு செய்தில் பல கட்சிகளும் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றதாக அறியமுடிகின்றது.
10வட்டாரங்களை உள்ளடக்கிய மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்கு 16அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக, ஒவ்வொரு கட்சியிலுமிருந்து 19பேர் போட்டியிடவுள்ளனர்..
குறித்த பிரதேசசபைக்காக இலங்கை தமிழரசுகட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஐக்கியதேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி ஆகிய கட்சிகளுடன் சுயேற்சைக் குழுக்களும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை தெரிவு செய்வதில் முன்மூலமாக செயற்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.
சில வட்டராங்களில், சில கட்சிகளில் போட்டியிடுவதற்கு ஒன்றுக்குமேற்பட்டவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றமையினால், உரிய வேட்பாளர்களை தெரிவு செய்தில் சிரமங்களை எதிர்கொண்டுவருதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலினைவிட அதிகமான கட்சிகள் இத்தேர்தலில் களமிறங்குவதற்கு ஆர்வம் செலுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.