சீன நாட்டு தம்பதிகள் 100பேருக்கு இலங்கை சம்பிரதாயப்படி திருமணம்

0
265
 சீன நாட்டைச் சேர்ந்த 100 தம்பதிகள் இலங்கை சம்பிரதாயப்படி ஒரே தினத்தில் இலங்கையில் திருமணம் செய்யவுள்ளனர். இந்த வைபவம் கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இன்று பிற்பகல் நடைபெறும்..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இதில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்வார்கள். அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜோன் அமரதுங்க ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள்.