தமது கோரிக்கைக்கேற்ப ஆசனப் பங்கீடு மேற்கொள்ளப்படாவிட்டால்தேர்தலில் இருந்து விலகவுள்ளதாக

0
326

திருகோணமலை நகரசபைத் தேர்தலில் தமது கோரிக்கைக்கேற்ப ஆசனப் பங்கீடு மேற்கொள்ளப்படாவிட்டால் குறித்த நகர சபைக்கான தேர்தலில் இருந்து விலகவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் திருகோணமலை நகர சபைத் தேர்தலில் டெலோ சார்பில் இரு வேட்பாளர்களுக்கான ஆசன ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் இணக்கம் காணப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.

எனினும் தற்போது தமது கட்சிக்கு ஒரு ஆசனத்தினை வழங்குவதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை நகர சபை தேர்தலில் ஒரு ஆசனம் மாத்திரம் வழங்கப்படுமாயின் அந்த நகரசபைத் தேர்தலில் தமீழீழ விடுதலை இயக்கம் போட்டியிடாது என ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.