இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியிலில் கையொப்பமிட்டிருந்த 7 வேட்பாளர்கள் விலகுவதாக அறிவிப்பு

0
255

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியிலில் கையொப்பமிட்டிருந்த 7 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மற்றும் செயலாளருக்கு முகவரியிட்ட கடிதத்தினை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலனிடம் கையளித்துள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் கையெழுத்திட்ட வேட்பாளர்களில் 7 வேட்பாளர்களே தமது விலகல் கடிதத்தினை கையளித்துள்ளனர்.

சாவகச்சேரி நகர சபைக்கான தமது கட்சியின் வேட்புமனுப் பட்டியல் தயாரிப்பின் போது கபடநோக்குடன் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை மறைத்து தம்மிடம் கையொப்பம் பெறப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.