ஜெமினிட் எனப்படும் விண்கல் பொழிவு

0
366

ஜெமினிட்  எனப்படும் விண்கல் பொழிவு இன்று இலங்கையில் மிகத்தெளிவாக தென்படவுள்ளது.

இன்று நள்ளிரவில் இதனை அவதானிக்க முடியும் என இலங்கை கோள்மண்டல பணிப்பாளர் பிரியங்கா கோரலகம தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு நடுவானிலும் அதிகாலையில் மேற்கு வானிலும் விண்கல் பொழிவை காண முடியும்.

கடந்த ஏழாம் திகதி முதல் எதிர்வரும் 17 ம் திகதி வரையான காலப்பகுதியில் ஜெமினிட் விண்கல் பொழிவு இடம்பெறுகின்றது. அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த விண்கல் பொழிவு டிசம்பா் மாத நடுப்பகுதியில் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.