மாவையின் செயற்பாட்டால் மட்டக்களப்பில் குழப்பம்.

0
804


உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மாவை சேனாதிராஜா எடுத்த தன்னிச்சையான சில முடிவுகளால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பநிலையினை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித்தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து எந்நவொரு தமிழரசுக்கட்சி முக்கியஸ்தரையும் அழைக்காமல் முடிவினை எடுத்துவிட்டு கட்சியின் செயலாளருக்கு அறிவித்துள்ளார். செயலாளர் இதற்கு பதிலளிக்கையில் இந்த பங்கீடு தொடர்பில் எனக்கு உடன்பாடு இல்லை கட்சித்தலைமையின் தீர்மானத்தை நான் தட்டிக்கழிக்க தயார் இல்லையென தெரிவித்துள்ளார்.
இதனை சாதகமாகப்பயன்படுத்திக்கொண்ட ரெலோ,புளட் தரைவர்கள் தங்களுக்கு சாதகமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பங்கிடுகளை மேற்கொண்டுள்ளதாக தமிழரசுக்கட்சின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை ஒரு தொகுதியில் இணர்டு பிரதேச சபைகளை ரொலோவுக்கு கையளித்தமை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கட்சித்தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவையின் செயற்பாட்டால் மட்டக்களப்பில் குழப்பநிலை ஏற்பட்டுள்ள நிலையில் இது சம்பந்தமாக இன்று கட்சியின் மட்டக்களப்பு முக்கியஸ்தர்கள் கூடி ஆராயஉள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சித்தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை கட்சியின் செயலாளர் நாயகம் எவ்வாறு தீர்த்து வைக்கப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.