கலையும் இலக்கியமும் இன ஐக்கியம் மற்றும் அபிவிருத்தியினையும் கொண்டு வரவேண்டும் – மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர்

0
467

கலையும் இலக்கியமும் எங்கள் மாவட்டத்தினுடைய சௌஜன்னியமான இன ஐக்கியத்தினை அதே போல அபிவிருத்தியினைக் கொண்டு வர வேண்டும். அதற்கு ஏனைய சமூகங்களுடைய கலை கலாச்சாரங்கள், மத, பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொண்டு செயற்படுவது சிறப்பானதாக இருக்கும் என மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (12) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட இலக்கிய விழாவில் தலைமையுரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்,

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு இனக்குழுக்கள் ஒன்றாக இணைந்துவாழுகின்ற பிரதேசம், இந்த மாவட்டத்தில் கலையுமு; கலாச்சாரமும் இலக்கியப்பண்புகளும்மரத்துப் பொயிருப்பதை நாங்கள் அறிவோம். மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் கலை கலாச்சாரம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற பிரதேச செயலாளர்கள் நிறைவாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதை நான் அறிவேன்.

அண்மையில் கூடு ஒரு பிரதேச செயலகத்தினுடைய கலாச்சார விழாவில் பங்கு பெறக்கூடிய வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. இந்த மாவட்டத்தில் மிகச்சிறந்த இலக்கிய வாதிகள் உருவாகி இன்றும் அவர்களுடைய செயற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருப்பதை நான் அறிவேன். அதே போல கிராமியக் கலை தொடக்கம் பல்வேறு இனக் குழுமங்களுடைய தனிப்பட்ட சிறப்பான கலையம்சங்கள் இந்தப்பிரதேசத்தின் மூல முடுக்கெல்லாம் இடம் பெறுவதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

ஒரு கலை அந்தப்பிரதேசத்தினுள் இருக்கின்ற மக்களினுடைய மனங்களை வளப்படுத்துவதன்ஊடாக அந்தப்பிரதேசததில் இருக்கின்ற மக்களினுடைய உள ரீதியான விருத்தியினை ஏற்படுத்தி அதனூடாக அந்தப்பிரதேசத்தினுடைய அபிவிருத்திக்கு வழி செய்யககூடியதாக இருக்கும். அந்த அடிப்படையில் மாவட்ட செயலகமும், பிரதேச செயலகங்களும் இரண்டு விதமான அமைப்புக்களினை ஏற்படுததிச் செயற்படுத்திக் கொண்டிருப்பதனை நீங்கள் அறிவீர்கள்.

அந்த அடிப்படையில் கலாச்சாரப் பேரவை பிரதேச ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் செயற்பட்டுக்கொண்டு வருகிறது. அதே போல மாவட்ட கலாசார அதிகாரசபையும் மாவட்ட, பிரதேச ரீதியாகவும் செயற்பட்டுக்கொண்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்தச் சந்தர்ப்பததில் பிரNதுசங்களிலிருக்கின்ற கலைஞர்களும் இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்கள் பல்வேறு வகையாகவும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். அந்த அடிப்படையில்தான் இன்று சிறப்பான விருதுகள் பலவற்றினை வழங்குகிறோம்.

மாவட்டத்தில் பிரதேச, மாவட்ட ரீதியில் அரச உத்தியோகத்தர்களான கலாசார உத்தியொகத்தர்களும் அது சார்ந்த உத்தியோகத்தர்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கலைஞர்களின் ஒத்துழைப்பானது சிறப்பானதாக அமைந்திருக்க வேண்டும். இந்த விழாவில் கூட மிகச்சிறியளவானவர்கள் பங்கு கொண்டிருப்பது கவலையானதொரு விடயம்.

இந்த வகையில் எதிர்வரும் காலங்களில் மாவட்ட இலக்கிய விழாவினையும் மாவட்ட கலாசர விழாவினையும் ஒரே காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தினங்களில் நடத்துவது சிறப்பாக இருக்கும் என நான் கருதுகின்றேன். அந்தவகையில் 2018ஆம் ஆண்டு அனைத்து இனக்குழுமங்கள், மதம்சார் கலாச்சரங்கள், கலைகளையும் ஒன்றாக இணைக்கின்ற வகையில் மாவட்ட இலக்கிய, கலாசார விழாவினை நடத்துவது சிறப்பாக அமையும்.

எங்களது பிரதேசத்தில் ஒற்றுமையும் சமாதானம் நிலவ வேண்டுமாக இருந்தால் ஏனைய சமூகங்களுடைய கலை கலாச்சாரங்கள், மத, பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொண்டு செயற்படுவது சிறப்பானதாக இருக்கும். அந்தவகையில் கலையும் இலக்கியமும் எங்கள் மாவட்டத்தினுடைய சௌஜன்னியமான இன ஐக்கியத்தினை அதே போல அபிவிருத்தியினைக் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.