கிழக்கு மாகாண விவசாயிகள் பிரச்சினை வெளிப்பாட்டு நிகழ்வு அறிக்கை. மட்டக்களப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

0
329

உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை,
மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் தங்களது
பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் (11 மார்கழி 2017) மட்டக்களப்பு
மாவட்டத்திலுள்ள வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் ஒன்று கூடி பிரச்சினைகள்
அடங்கிய மகஜர் ஒன்றினையும் தயாரித்து சனாதிபதிக்கு அனுப்புவதற்கான
தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் 03 மாவட்டங்களையும் சேர்ந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 150
பேர் கலந்து கொணடனர். இந்நிகழ்வானது அகம் நிறுவனத்தின் திட்ட
உத்தியோகத்தர் திரு.சிறிபாலு அவர்களின் தலமையில் நடைபெற்றது.

நிகழ்வு தொடர்பான சிறப்புரையினை இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின்
மட், அம்பாறை மாவட்ட இணைப்பாளர் .த.திலிப்குமார் அவர்கள் நிகழ்த்தி
இருந்தார்.

இந்நிகழ்வில் .க.லவகுசராசா அவர்களால் விரிவுரை நிகழ்த்தப்பட்டது

அதனை தொடர்ந்து வருகை தந்திருந்த 03 மாவட்டங்களிலுமுள்ள விவசாயிகளால்
தங்களது மாவட்டங்களில் பிரதானமாகவிருக்கின்ற சூழலியல் பிரச்சினைகள்
தொடர்பாக கலந்துரையாடப்பட்டு கருத்துக்கள் பகிரப்பட்டது

அந்த வகையில் கீழ் குறிப்பிடப்படும் முக்கியமான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டது

1. குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோயில் பொத்துவில் வரையாக
சிறுபான்மை மக்கள் வாழுகின்ற கரையோரப்பகுதிகளிலுள்ள கடற்பரப்பில் சுமார்
75கி.மீற்றர் நீளத்தில் ‘இல்மனைட்’ பெறுவதற்காக கடலில் இலங்கை
அரசாங்கத்தினால் குத்தகைக்கு வழங்கப்பட்ட தனியாhர் கம்பனி ஒன்றின் ஊடாக
மண் அகழ்வு நடைபெறப்போகின்றது அதனை உடன் தடுப்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு வேண்டினர்.

2. திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தனியாhர்
காணிகளிலும், அரச காணிகளிலும் சூழலுக்கு தாக்கம் தரக் கூடிய தொழில் நடவடிக்கைகள்
நடைபெறுவதாகவும், மேலும் பல இடங்கள் சுற்றுலாத்துறை, மற்றும் இறால், நண்டு
வளர்ப்பிற்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவை நடைபெறும் பட்சத்தில் தங்களது
நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதாகவும்
குறிப்பிட்டிருந்தனர்.

3. திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்காக 90
வீதம் தமிழ் மக்கள் வாழும் கரையோரக் காணிகள் குறிப்பாக கடலிலிருந்து 500ஆ
அகலம் கொண்ட பரப்புக் காணிகள் திருமலை துறைமுகப்பகுதிகளிலிருந்து வெருகல்
முகத்துவாரம் வரையாகவுள்ள பல்லாயிரக் கணக்கான காணிகள் சிங்கப்பூர்
தனியார் கம்பனிக்கு வழங்குவதற்கான 03 கட்ட பேச்சுக்கள் மத்திய அரசுடனும்,
மாகாண அரசுகளுடனும் நடைபெற்று முடிந்திருக்கின்றதாக அறியப்படுகின்றது.

4. குறிப்பாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சம்பூர்,
வாகரை பிரதேசங்களில் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட தனியாhர் , அரச காணிகள்
இலங்கை கடற்படையின் பயிற்சித் தளங்களுக்காக அபகரித்துள்ளனர், இதனால்
நாம் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம் எனக் குறிப்பிட்டனர்.

5. கிழக்கு மாகாணத்தின் பல விவசாய இடங்கள் படையினர் வசமுள்ளதுடன் வன
இலாகா, தொல்பொருள் திணைக்களம், அபிவிருத்தி என்ற போர்வையில் பல்தேசிய
கம்பனிகளுக்கும் சுற்றுலாத்துறைக்காகவும் பௌத்த விகாரைகளுக்காகவும் விவசாயக்
காணிகள் அத்துமீறி அபகரிக்கப்படுகின்றன.

6. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்: குச்சவெளி பிரதேசம்- 225 ஏக்கர்,
கெவிலியாமடு 61 ஏக்கர் மேச்சல் தரைக்காணியில் சிங்களவர்கள் அத்து மீறி
பிடித்துள்ளனர். கெவிலியாமடு 188 ஏக்கர் விவசாயக் காணியில் விவசாய
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

7. கிழக்கு மாகாணத்தில் மக்கள் பல வருடங்களாக இடம் பெயர்ந்திருந்ததன்
காரணமாக அவர்களது மேச்சல் தரை நிலங்கள், சேனைப்பயிர் செய்த இடங்கள்,
வேளாண்மை பயிரிட்ட வயல் காணிகள் போன்றன பற்றைக் காடுகளாக மாறியுள்ளன.
இவ்விடங்களை வன இலா எதுவிதமான வர்த்தகமானி அறிவித்தலுமின்றி
தனதாக்கிக்கொள்கிறது. இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் ஏறத்தாழ 72800
ஏக்கருக்கும் அதிகமான காணி வன இலாகாவினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தனர்.

8. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசத்தின் சலப்பையாறு
கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்காக 1805 ஏக்கர் காணி றைகம் உப்பளத்திற்கு
வழங்கப்பட்டுள்ளது. சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலையம் அமைக்க
தீர்மானிக்கப்பட்டிருந்த 505 ஏக்கர் காணி, அதே போன்று மட்டக்களப்பு
மாவட்டத்தில் வாகரை மற்றும் கொக்கட்டிச்சோலையில் இறால் பண்ணைக்கு தலா
2500 ஏக்கர், புதிதாக மூதூர் நல்லூர் பகுதியில் 100 ஏக்கர் நண்டு
வளப்பிறகாகவும், கிண்ணியா 900 ஏக்கர் காணிகள் வாழைச் செய்கைக்காகவும்
பல்தேசிய கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் விவசாயிகள்
வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்பதாகும். இன்னும் தனியார் கம்பனிகளுக்கு காணிகள்
குத்தகைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளையே தொடர்ந்தும் அரசு மேற்கொண்டு
வருகின்றுத.

9. சட்டபூர்வமற்ற மண் அகழ்வு நடவடிக்கைகள் தற்போது கிழக்கு மாகாணத்தின்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிண்ணியா, வெருகல் பிரதேசங்களிலும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேசத்திலும் தீவிரமடைந்துள்ளன.
இதனால் இயற்கை வளங்கள் அழிவடைவதுடன் இவ்வளங்களை ஆதாரமாகக் கொண்டு
மேற்கொள்ளப்படும் மக்களின் ஜீவனோபாய நடவடிக்கைகளும் கடுமையாகப்
பாதிப்படைந்துள்ளன.

10. கிழக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகளுக்கான குளங்கள்,விவசாய வீதிகள்,
அணைக்கட்டுகள் போன்றன புனருத்தாரணம் மேற்கொள்ள வேண்டும்.

11. விவசாயிகளுக்கான சீரான ஆளுமைப் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

12. சிறுபான்மை மக்களின் விவசாய காணிகளுக்கான ஆவணங்கள் வழங்குவதில்
தாமதமும், இழுத்தடிப்புப் போக்கும் அரச மட்டங்களில் காணப்படுவதால், உமக்கு உரிய
உர மானியங்களைப் பெறமுடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

13. கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுபான்மை மக்கள் கால்நடைகளுக்கான மேச்சல்
தரைகள் இன்று போதுமான அளவு வழங்கப்படாத நிலையில், கால்நடைகள் உணவுகள்
போதுமாக கிடைக்காத நிலையில் இறந்து கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்(
உதாரணம் :- தம்பலகாமம் பகுதியில் 01 மாத காலத்திற்குள் 30 கால்நடைகள்
இறந்துள்ளது)

14. முறையான நீர் முகாமைத்துவம் இல்லாத காரணத்தினால் மாரியில் அதிக
வெள்ளமும், கோடையில் அதிக வெப்பமும் ஏற்பட்டு விவசாயம் பாதிப்படைகிறது.
கடன்வாங்கி பயிர் செய்து இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும்
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுவதில்லை.

15. அறுவடை காலங்களில் விவசாயிகளுக்கு நிலையான விலை நிர்ணயம்
வழங்கப்படுவதில்லை. உற்பத்திக்கு அதிக விலையும், விளைச்சலுக்கு குறைந்த விலையும்
காணப்படுகிறது.

16. கடந்த 30 வருட காலத்தில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தினால் பாதிக்ப்பட்ட
மக்களுக்கு உரிய முறையில் முழுமையான இழப்பீடுகளை வழங்கி, நிலையான வாழ்வாதார
தொழில் ஊக்குவிக்கப்படவில்லை.

மேற்படி பிரச்சினைகளை தொகுத்துக் கொண்ட விவசாயிகள் மேற்படி விடயங்களை
கிழக்கு மாகாணத்தில் கொண்டு செல்வதற்காக விவசாய போரம் ஒன்றினையும்
அமைத்துக் கொண்டனர்.

இவற்றில் மாவட்ட மட்டங்களில் இயங்குவதற்கு மாவட்ட விவசாயப் போரமும், மாகாண
மட்டத்தில் செயற்படுவதற்கு மாகாண போரமும் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாகாண
மட்டத்தில் செயற்படுவதற்கு 33 பேர் கொண்ட பொதுக் குழுவும், நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்காக 13 பேர் கொண்ட செயற்பாட்டு குழுவும் தெரிவு செய்யப்பட்டு
அதற்கான ஏற்பாட்டாளர் ஒருத்தரும் தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து இந்த மாகாண செயற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் தாங்கள் கிழக்கு
மாகாணத்தில் எமது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் உரிமை மீறல்களை உடனுக்குடன்
நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக உறுதி உரை வழங்கியதுடன,;
அகத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி.ந.அஞ்சலிதேவி அவர்களின் நன்றியுரையுடன்
இன்றைய கலந்துரையாடல் நிறைவு பெற்றது.