15ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு

0
443

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல அப்பேகமவில் நேற்று இடம்பெற்ற தேசிய பாடசாலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார்.
இதன்போது ஆயிரத்து 288 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

பாடசாலை கல்வியை மேம்படுத்தும்நோக்கில் அனைத்து கல்வி வலயங்களிலும் மேலதிக ஆசிர்களுக்கான அமைப்பொன்று வழங்கப்படும். இதேபோன்று கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து வெற்றிடங்களும் வருடந்தோறும் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார். மேலும் கல்வித்துறையில் எந்தவொரு நியமனமும் அரசியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.