பணி பகீஷ்கரிப்பில் ஈடுபடுவோர் தமது கடமையிலிருந்து தாமாகவே நீங்கியவர்களாக கருதப்படுவர்

0
318
ரெயில் சேவை அத்தியவசியமான சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ரெயில் சேவையில் தொடர்ந்து பணி பகீஷ்கரிப்பில் ஈடுபடுவோர் தமது கடமையிலிருந்து தாமாகவே நீங்கியவர்களாக கருதப்படுவர் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, தங்களது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.