கொக்கட்டிச்சோலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

0
326

(படுவான் பாலகன்)
உரம் இல்லாமையினால் பயிர்கள் அழியும் நிலையேற்பட்டுள்ளதாக குறிப்பிட்டும், விவசாயத்திற்கு தேவையான உரத்தினைப் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கூறி மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் ஆர்பாட்டமொன்றினை நேற்று(09) சனிக்கிழமை மேற்கொண்டனர்.

கொக்கட்டிச்சோலை கமநல கேந்திர நிலையத்தின் முன்பாக நடைபெற்ற குறித்த ஆர்பாட்டத்தில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அரசினால் உரத்திற்கான மானியத்தொகை வழங்கப்பட்டுள்ள போதிலும், உரத்தினை எந்த வர்த்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்பட்டிருக்கின்றது. இதனால் உரிய காலத்திற்குள் பயிர்களுக்கு உரம் இடமுடியாதுள்ளதாகவும், இதன் காரணமாக பயிர்கள் வளர்ச்சி குன்றி, அறுவடையின் போது சிறந்த விளைச்சலை பெறமுடியாத நிலையேற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். மேலும் உரமானியத்திற்கு அரசு வழங்கி பணத்தினைக் கொண்டு உரம் இன்மையால் நஞ்சை வாங்கி குடிப்பதா? எனவும் கேள்வி எழுப்பினர்.

இதன் போது, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது ஏன்? இரண்டு இலட்சம் மென்ரிக்தொன் அரிசியை மேலதிகமாக இறக்குமதி செய்யும் அரசே! உள்ளுர் விவசாய உற்பத்தியை அழித்து விடுவதா உனது திட்டம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.