பாடசாலைக் கல்வியில் குறித்த சில பாடங்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை

0
360

பாடசாலைக் கல்வியில் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் முதலான பாடங்களுக்கு முன்னுரிமை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் அகில இலங்கை கணித வினா-விடை போட்டியிலும், தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் முதலான விடயதானங்கள் சார்ந்த வேலைவாய்ப்புக்கள் அதிகம். இந்தத் துறைகளைப் பொறுத்தவரையில் உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புக்கள் உள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.