வைத்திய சேவையாளர்களுக்கு செயன்முறைப்பயிற்சி

0
678

(படுவான் பாலகன்) மார்படைப்பினால் ஏற்படும் மரணத்தினை தவிர்க்க இலகுவாக மேற்கொள்ளக்கூடிய வழிவகை தொடர்பிலான செயன்முறை பயிற்சி இன்று(07) வியாழக்கிழமை மாலை 03மணியளவில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைத்து வைத்தியசேவையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவனேசன் தலைமையில் நடைபெற்றஇ இப்பயிற்சியினை இலண்டனில் வசித்துக்கொண்டிருக்கும் வைத்தியர் வேற்பிள்ளைஇ வைத்தியர் ஜஸ்மின் ஆகியோர் வழங்கினர். குறித்த செயன்முறைப் பயிற்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகிழடித்தீவுஇ மண்டபத்தடிஇ நாவற்காடுஇ மண்டூர் ஆகிய வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்திய சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.

மார்படைப்பு ஏற்படுகின்ற போதுஇ அவற்றினை வீட்டிலோ அல்லது வைத்தியசாலையிலோ வைத்து மரணம் சம்பவிக்காத வகையில் காப்பாற்றுவது தொடர்பிலும்இ அதற்காக பயன்படுத்தப்படும் உபகரணத்தினைப்பற்றியும் செயன்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வைத்திய துறையில் கல்விபயின்று வெளிநாட்டில் இருக்கின்றவர்களினால் வைத்திய உபகரணங்கள் சிலவும் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.