வேலையில்லா பட்டதாரிகள் கல்லடிப்பாலத்தை முற்றுகை

0
433

கடந்த காலத்தில் வீதியில் நூற்றுக்கணக்கான நாட்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த நாம் மீண்டும் வீதியில் இறங்கி போராடுவதற்கு தயாராக உள்ளோம். மாகாண சபையே எமக்கு நியமனத்தை வழங்க வேண்டும் பக்கச்சார்பாக செயற்பட வேண்டாம் என பல்வேறு கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சற்றுமுன்னர் கல்லடிப்பாலத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் வீதியிலிறங்கி போராடப் போவதாகவும் இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பட்டதாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.