நாளை நள்ளிரவு முதல் பகுதிநேர வகுப்புக்களுக்கு தடை.

0
445
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை(06) நள்ளிரவின் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் ஜித்த தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகும். இம்மாதம் 21ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சை முடிவடையவிருக்கிறது.
இம்முறை எட்டு லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவிருக்கிறார்கள்.