பெண்களை விட ஆண்களின் கணனி எழுத்தறிவு வீதம் உயர்வு

0
245

2017 இன் முதல் ஆறு மாதங்களில் நடத்திய அண்மைய அளவீட்டின் அறிக்கையை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 5 தொடக்கம் 69 வரையான வயதுப்பிரிவுகளுக்கிடையில் கணனி எழுத்தறிவானது 28.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது என்று தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்இ கலாநிதி அமர சதரசிங்க தெரிவித்தார்.
தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

கிராம மற்றும் தோட்டப் பிரிவுகளின் கணனி எழுத்தறிவு ஆனது முறையே 26.5 மற்றும் 9.5 சதவீதமாக இருக்கையில் வதிவிடப் பிரிவுகளுக்கிடையில் 41.1 சதவீதத்தினையுடைய உயர்ந்த கணனி எழுத்தறிவினை நகரப் பிரிவானது வெளிப்படுத்தியது.
அளவீட்டு பிரிவுகளின் படி ஆண்களுக்கிடையிலுள்ள கணனி எழுத்தறிவானது பெண்களினை விட (26.1%) பார்க்கிலும் உயர்வாக இருக்கின்ற 30.7 சதவீதமாகும். எல்லா வயதுப் பிரிவினர்களை ஒப்பிடும் போது 15 தொடக்கம் 19 வரை இடைப்பட்ட வயதினர் 60.7 சதவீதமுடைய உயர்ந்த கணனி எழுத்தறிவு வீதத்தினைத் தெரிவித்தனர். 71.2 சதவீதமானது க.பொ. த. (உ/த) அல்லது கல்வி மேல் மட்டத்திற்காக தெரிவிக்கப்படுகின்றது. கணனி எழுத்தறிவானது ஆங்கில மொழியில் எழுத்தறிவுடையவர்களுக்கிடையில் மிகவும் உயர்வாக (71.1%) இருக்கின்றது என அளவீட்டு முடிவுகள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான காட்டியாக டிஜிட்டல் எமுத்தறிவானது புதியதாக அறிமுகப்படுத்தப்படுகின்றதுடன் நபரொருவர் (5 – 69) வயதானவர் அவரோ/ அவளோ கணனி, மடிக்கணனி, டலட் அல்லது ஸ்மாட் போனை அவராகவோ/ அவளாகவோ பயன்படுத்த முடியுமானால் டிஜிட்டல் எழுத்தறிவானது 38.7 சதவீதமாகவும் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் முறையே 42.5 மற்றும் 35.2 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டிருந்தது.

கிராமப் பிரிவு மற்றும் தோட்டப் பிரிவுகளுக்கானது முறையே 36.4 மற்றும் 16.4 சதவீதமாக இருக்கின்றபோது நகரப் பிரிவுக்கான டிஜிட்டல் எழுத்தறிவானது 54.5 சதவீதமாக இருக்கின்றது. மாவட்ட ரீதியாக பதுளை மாவட்டமானது இணையம் பாவிக்கும் சனத்தொகையில் 4.9 சதவீதத்தை உடைய குறைந்த சதவீதத்தைக் காட்டுகின்ற போது உயர்ந்த சதவீதமானது (44.6%) கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளியிடப்பட்டது என்று தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமர சதரசிங்க மேலும் தெரிவித்தார்.
இந்த அளவீட்டின் கண்டுபிடிப்புக்களின் விபரங்களைத் தரும் செய்தி அறிக்கையொன்றானது தொகைமதிப்புப் புள்ளிவிபரத்தின் இணையத்தளமான www.statistics.gov.lk இல் வெளியிடப்பட்டிருக்கின்றது.