பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல்

0
327

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறுமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதற்காக இரண்டு கட்டங்களாக வேட்புமனு கோரப்படவுள்ளது. முதற்கட்டமாக 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்கப்படும்.
இரண்டாவது கட்டமாக ஏனைய 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

 

தேர்தல் முறைப்பாடுகளை ஏற்பதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மட்டத்தில் இவை ஸ்தாபிக்கப்படும்.
எதிர்வரும் வியாழக்கிழமை தெரிவத்தாட்சி அதிகாரிகள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் விசேட கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.