சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவும், கலாசார நிகழ்வும்.

0
230
“மாற்றத்தை நோக்கிய மாற்றுத்திறனாளிகள்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமும், கலாசார நிகழ்வும் (03.12.2017) மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 27 கிராம சேவகர் பிரிவுகளிலும் இனங்காணப்பட்ட மாற்றத்திறனாளிகள் மற்றும் வறுமைபட்ட நபர்களுக்கான பயன்தகு விடையங்களையும், உதவிகளையும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளின் வாழ்கையினை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் வகையிலும், அவர்களுடைய கல்வி பயிலும் பிள்ளைகளுக்கான உதவிகளைபஷ் பெற்றுக்கொடுத்தல் ஊடாக அவர்களுடைய கல்வியிலும் பாரிய முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவதற்காக செயற்படுகின்ற சமூக உள்வாங்கல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக சமூக சேவைகள், கலாசார உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் மிகச்சிறப்புற இடம்பெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று, பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. லக்ஸ்வர்னியா பிரசந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு ‘ஊயுஆஐனு’ நிறுவன திட்ட முகாமையாளர் திரு. க. காண்டீபன் அவர்களும், மண்முனைப்பற்று பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் திரு. அ. சபேசன் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ச. அமிர்தநாயகி அவர்களும், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கஜமுகன் சங்கீதா அவர்களும், கலாசார அபிவிருத்தி உதவியாளர் திரு. யு.டு. முசாதிக் அவர்களும், மேலும் சமூக உள்வாங்கல் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், மற்றும் பிள்ளைகள் என அணைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவ் நிகழ்விற்கான அணுசரனையானது மண்முனைப்பற்று பிரதேசசெயலக சமூகசேவை, கலாசார பிரிவு, ஆரையம்பதி பிரதேச சமூக சேவகரான திரு. யு. மகேந்திரலிங்கம் ஐயா, கதிரவன் கலைக்கழகத்தலைவர் திரு. இன்பராசா, சகாரா புத்தக நிலைய உரிமையாளர் திரு. வி. விஜயகுமார், வுறழ றுயல வுலசந ரூ றுநடன ளூழி உரிமையாளர் செல்வன். ச. சரமராஜ், ளுயவாலய ளுவரனழைள ரூ ஏனைநழள உரிமையாளர் செல்வன். சத்தியன் ஆகியோரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.