சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வும் சிரமதானமும்

0
313

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வும் சிரமதானமும்சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாகிய இன்று ஏர்முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் விழிப்புணர்வு நிகழ்வும் சிரமதானமும் செங்கலடி சந்தையில் மேற்கொள்ளப்பட்டது.

ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் ஆலோசனை வழிகாட்டலிலும் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் அனுசரணையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் பாவனை தொடர்பாகவும் சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் விழிப்புணர்வு நாடகங்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளினால் செங்கலடி சந்தைப் பகுதி சிரமதானம் மூலம் சுத்தம்செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.