பாம்புகள் கல்லடி பகுதியில் படையெடுப்பு

0
965

மட்டக்களப்பு, கல்லடி கடல் பகுதியில் மீன்களுக்குப் பதிலாக கரவலையில் இன்று (02)  காலை பாம்புகள் பிடிபட்டுள்ள, மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் கல்லடி பாலத்துக்கு கீழால் பாம்புகள் படையெடுத்துள்ளதையடுத்து, அனர்த்த அபாயங்களாக இருக்குமோ என்னும் மனநிலையும் அச்சமும் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

எனினும், இக்காலப்பகுதியில் வருடா வருடம் இவ்வாறான பாம்புகள் மீனவர்களின் வலையில் சிக்குவது வழக்கமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.