சேவையை பொறுக்கமுடியாத அரசியல்வாதிகளும், அடிவருடிகளும் பொய்ப்பிரச்சாரம செய்கின்றனர்.

0
324

என்னையும் எனது இயக்கத்தையும் தொடர்புபடுத்தி, ஆரையம்பதி விஜியின் 1990 ஆண்டு படுகொலையை பற்றி முகம் அற்றவர்களினால் முகநூலில் செய்திகள் பரப்பப் பட்டன. 1986 ஆம் ஆண்டு சகோதரப்படுகொலைகள் தொடங்கிய காலம்முதல் 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாகிய காலம் வரை இந்த நாட்டில் என்ன நடந்தது என்று அறிந்தவர்களே இப்படியான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்

 

இந்த காலத்தில் படித்த பெண்கள்( பேராசிரியர் உட்பட) அரசியலில் ஈடுபட்ட பெண்கள் ,அரசியல் வாதிகளின் மனைவிமார், ஏனைய இயக்க உறுப்பினர்களின் சகோதரிகள் ,சொந்தங்கள் , இயக்க பெண்போராளிகள் என நூற்றுக்கணக்கான விஜிகள் கொல்லப்பட்டுள்ளனர் . உண்மையிலேயே இந்த காலகட்டத்தில் நான் கொழும்பில் நின்றிருக்கின்றேன் ஆதாரம் என்னிடம் உண்டு .இப்படி இருக்க நான் இந்த நாட்டிற்கு திரும்பி வந்து அரசியலில் ஈடுபட்டு எனது மக்களுக்கு என்னாலான சேவையை திறம்பட செய்துகொண்டிருப்பதை பொறுக்கமுடியாத  அரசியல்வாதிகளும்,அவர்களின் அடிவருடிகளும் இப்படியான பொய்பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றார்கள்.

 

இவர்கள் உண்மையானவர்கள் ,என்மேல் பொறாமை அற்றவர்கள் என்றால் ஏன் இவர்கள் தங்களது இந்த பொய்பிரசாரத்தை 2012 கிழக்குமாகாண சபைத்தேர்தலுக்கு முன்பு செய்யவில்லை. நான் 17 வருடம் நாட்டில் இல்லாமல் இருந்து மீண்டும் வந்து மாகாண சபைத்தேர்தலில் 16500 வாக்குகள் பெற்றதும் அதனூடான சேவையின் நிமிர்த்தம் 2015 பாராளுமன்ற தேர்தலில் 28000 வாக்குகள் பெற்றதும் ( பட்டிருப்பு தொகுதியில் ஆகக்கூடுதலான வாக்கு சிறிநேசன் பா.உ வை விட கூட) இவர்களுக்கு பொறுக்கமுடியவில்லை. என்னை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற வேண்டும் என்று பல கோணங்களில் சிந்தித்து,பல பொய் முகநூல் கணக்குகளை ஆரம்பித்து இந்த கைங்கரியத்தை செய்துகொண்டிருப்பவர்கள் யார் என்றும் மக்களுக்கு விளங்கும். நான் அரசியலை விட்டு போவதால் எனக்கு ஒன்றும் நஷ்டம் கிடையாது. எனக்கு லாபம்தான். கொஞ்சம் பணம் மிஞ்சும்.அது மாத்திரமல்லாது லண்டனில் வளந்த பிள்ளைகளை தனிமையில் விடாது அவர்களுடன் காலத்தை கடத்துவேன்.

நான் அரசியலில் இருப்பது தொழிலுக்காக அல்ல. அந்த உழைப்பும் எனக்கு தேவையில்லை. 60 மாதம் 51 ஆயிரம் ரூபாப்படி நான் சம்பளம் கிட்டத்தட்ட 30 இலட்சம் எடுத்திருக்கின்றேன். GK அறக்கட்டளை தொடங்கி 25 இலட்சம் செலவழித்து அமரர் ஊர்தி எடுத்து வறுமைப்பட்ட மக்களின் சவத்தை இலவசமாக ஏற்றிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றேன். கடந்த மே மாதம் தொடங்கி இன்றுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட சேவை செய்திருக்கின்றோம். பொத்துவிலுக்கும் சென்றிருக்கின்றோம். சாரதியின் மாதாந்த சம்பளம், டீசல் இவை அனைத்தும் எனது சொந்த செலவே தவிர யாரும் இதுவரை ஒரு சதமும் நன்கொடையளிக்கவில்லை. எந்த அரசியல்வாதி சொந்த செலவில் பொதுசேவை செய்கின்றார் .நான் அரசியலில் இருந்து ஒதுங்குவதை எனது மக்களும் நானுமே தீர்மானிக்க வேண்டுமே தவிர என்னைக் கண்டு தொடை நடுங்கி பயப்பிடும்  அல்ல. மக்களே தீர்ப்பாளர்கள். உங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

ஜனா