மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

0
335
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் 36 மணி நேரத்துக்கு தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை மற்றும் மிக கடுமமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது
அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதே போல, களக்காடு அருகே உள்ள தலையனையிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலில் சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று காற்றுவீச வாய்ப்பு உள்ளது. எனவே தென் மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.