மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு.

0
235
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடனும்,வழிகாட்டல்களுடனும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட “போதைப்பொருள் பாவனையை படசாலையிலிருந்து ஒழித்தல்” எனும் விழிப்புணர்வு செயலமர்வு.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களின் ஒருமித்த சிந்தனையுடன் போதையற்ற நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனும் செயற்திட்டத்தின்படி கல்வி அமைச்சினால் நாடளாவியரீதியில் உள்ள பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பேண்தகு அபிவிருத்தியை மையமாக கொண்டு போதையற்ற நாட்டையும்,பாடசாலையையும் உருவாக்கும் செயற்திட்டத்தை கிழக்கு மாகாண பாடசாலைகளில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து வலயங்கலிலும் உள்ள பாடசாலைகளிலில் “போதைப்பொருள் தடுப்புக்குழுவுக்கு பொறுப்பாக செயற்படும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு” மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இன்று புதன்கிழமை (29.11.2017) காலை (9.00-4.00) முதல் மாலை வரையும் நடைபெற்றது.
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் யூடி ஜெயக்குமார்,கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன்,மாகாண கல்வித்திணைக்களத்தின் உதவிகல்விப்பணிப்பாளர் எஸ்.அரிகரன்,மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் ,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் தொழில் வழிகாட்டல் மற்றும் மனநல ஆலோசகர் அழைகையா-ஜெயநாதன் மற்றும் கே.சுபாஸ்சந்திரன்,ஏ.எல்.எம்.ரிஸ்வி,கே.கிருபாகரன், கே.சிவராசா,ஏ.ஜெயா,ரீ.விஸ்வஜிந்தன்,ஏ.ரேவசுரேஸ் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.இதன்போது  பாடசாலையிலிருந்து போதையை தடுப்பதற்கான வழிமுறைகளையும்,போதைப்பொருளை கண்டுபிடிப்பதற்கான யுக்திகளையும்,போதைப்பொருள் பாவணையால் ஏற்படும் பாதிப்புக்கள்,நாட்டின் போதைப்பொருள் ஸ்த்திரத்தன்மை,போன்றவற்றையும் பல்லூடகத்தின் மூலம் போதிய விளக்கங்களுடனும்,புள்ளிவிபர ஆதாரத்துடனும் தெளிவூட்டப்பட்டது.இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 210 ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.