வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தவித தடைகளுமின்றி மாவீர்களுக்கு அஞ்சலி

0
557

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தவித தடைகளுமின்றி உணர்வுபூர்வமாக மக்கள் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது நல்லாட்சிய அரசாங்கத்தில் நல்லெண்ண செயற்பாட்டின் வெளிபாடாகவே நான் கருதுகிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ; மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்துக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்கள் சமூக அமைப்புகளுக்கு உபகரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (28) பிரதேச செயலக த்தில் நடைபெற்றது இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் 2017ம் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஏறாவூர் பற்று பிரதேசத்துக்கு 18 திட்டங்களுக்கு 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்திருந்தார் இதில் 14 அமைப்புகளுக்கு 7 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில நடைபெற்ற இந்நிகழ்வில் கணக்காளர் ஜோர்ஜ் அன்டனிஅன்டனிராஜ் விளையாட்டுக்கழக மற்றும் பொமு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – மாவீரர் தினத்தை வடக்கு கிழக்கு பகுதிகளில் பரிபூரண்மாக அனுட்டிப்பதற்கு தடை விதிக்காதமை நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லெண்ணப்பாங்கே தவிர இலங்கையுள்ள தமிழ் மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்கிவிட்டோம் என்று சர்வதேசத்துக்கு காட்டும் செலயலாக அமையக் கூடாது.

மாவீரர்களை நினைவுகூருவது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். 1983ம் ஆண்டுகளில் நாட்டில் பெரும் கிளற்சியை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் உயிழந்த அனைத்து வீர்கபளையும் வருடா வருடம் நினைவுகூருகின்றார்கள்.

அதேபோன்று இந்த நாட்டின் தேசிய இனமாக இருக்கின்ற தமிழர்கள் மாவீரர்களாக இந்த மண்ணில் விதைக்கப்பட்ட தமது உறவுகளை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். நல்லாட்சி அரசு அந்த கடமையைச் செய்துள்ளது. இந்த நடைமுறை தொடர்ந்து இருக்க வேண்டும். ஆடசிகள் மாறவாம் மாவீரர் தினத்தை மக்கள் அனுட்டிப்பதில் மாற்ற கொண்டுவரக்கூடாது. தடை செய்யக் கூடாது.

கடந்த காலங்களில் படையினர் பல வழிகளிலும் இதனைத் தடுத்தனர். இந்த வருடம் உணர்வு பூர்வமாக அனுட்டிப்பதற்கு எந்த வித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை இதே Nபுhன்று இனிபரும் காலங்களிலும் மாவீரர் தினம் அனுட்டிப்பதற்கு அரசு எந்த தடையும் விதிக்கக்கூடாது என்றார்