மட்டக்களப்பு மாவட்ட வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு

0
324

(வாகரை நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவாக பல வருடங்களாக எதுவித அஞ்சலிகளும் செலுத்தப்படாத நிலைமை காணப்பட்டதுடன் துயிலும் இல்லமும் உடைக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. வாகரை பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பல நலன் விரும்பிகளால் ஓரளவு புனரமைக்கப்பட்டு கார்த்திகை 27 ஆன இன்று வாகரை பிரதேச மக்களும் இளையோர் அமைப்பும் இணைந்து வாகரை கண்டலடி மாவீரர்; துயிலும் இல்லத்தில் உயிர்நீத்த மாவீரர்களுக்கான மரியாதைகளை செலுத்தினர். இதில் உயிர்நீத்த மாவீரர்களின் உறவினர்களால் இன்று மாலை 6.05 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கான மரியாதைகள் மற்றும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கரும்புலி மேஜர் கண்ணாளனின் தாயார் ஏற்ற ஏனைய சுடர்கள் மக்களால் ஏற்றப்பட்டதுடன் இந்நிகழ்வில் பல்லாhயிரக்கணக்கான மக்களுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பல ஆண்டுகளின் பின்னர் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இது போன்றதொரு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நீண்ட காலங்களின் பின்னர் குறித்த மாhவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஓரளவு ஆதரவு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என வாகரை பிரதேச மக்கள் கூறுகின்றனர்.