சுயதொழிலுக்கு யோகேஸ்வரன் எம்.பி. உதவி

0
228

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீர்த்த மாவீரர்களின் நினைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் ஏற்பாட்டில் மாவீரர் குடும்பத்துக்கு நிதி உதவி திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களாக தனது நான்கு பிள்ளைகளை மண்ணுக்கு உயிர் தியாகம் செய்த கிரான் முருக்கன்தீவைச் சேர்ந்த டேவின் பூரணம் என்பவருக்கு சிறு கடை ஒன்றை அமைத்து வியாபாரம் செய்வதற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

கடனாவில் வசிக்கும் எஸ்.பாலா என்பவரிடம் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் குறித்த மாவீரர் தாயின் வருமானத்தை மெருகூட்டும் வகையில் பண உதவியினை வழங்கி வைத்தார்.

முருக்கன்தீவைச் சேர்ந்த டேவின் பூரணம் என்பவருக்கு பதின் மூன்று பிள்ளைகள் அதில் மூன்று ஆண், ஒரு பெண் ஆகியோர் போராட்டத்தில் உயிர் நீர்த்த மாவீரர் போராளியாகி உள்ளதுடன், தற்போது அவருடன் மூன்று பிள்ளைகள் வசித்து வருகின்றனர். ஏனையவர்கள் திருமணம் செய்துள்ளனர். இவரது கணவரும் இறந்து விட்டார்.

தனது பிள்ளைகளை பராமரிப்பதில் பாரிய சிக்கல் நிலையில் வாழ்ந்து வந்த சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் சுயதொழிலுக்கு பணத்தொகை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.