லண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் 2017

0
339
 விண்ணிலும் மண்ணிலும் போராடி டலிலும் கரையிலும் களமாடி விளைநிலத்துக்காக வித்தாகிப் போனபுனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக வர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காகதம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது.
 
இன்றைய நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மாவீரர் நாளினை அனுஷ்டித்தனர். அந்த வகையில் ஐக்கிய இராச்சியத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்க ப்பட்ட மண்டபத்தில் நடைபெற்றது . குறித்த நிகழ்வில் 10 ஆயிkரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  . 
 
காலை 11.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி மதியம் 12.35 அளவில் மாவீரர்களுக்கான  சுடரேற்றிஅஞ்சலி செலுத்தப்பட்டது.
  
நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் ஏற்றிவைத்தார்பிரித்தானிய தேசியகொடியினை இளையோர் அமைப்பு  கிரிஷ் சபாபதி ஏற்றி வைத்தார் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினைஅனைத்துலக செயலக பொறுப்பாளர் பொ.மகேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.  ஈகைச்சுடரினை நாதன் அவர்கள் ஏற்றிய  சம நேரத்தில் கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகள் அவர் தம் உறவுகளுக்காகசுடரேற்றினார்கள்.