93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் ஏற்பு

0
224

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு உள்ளூராட்சி மன்றத்திற்கே வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அதனடிப்படையில், சாவகச்சேரி நகர சபைக்கு மாத்திரமே வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 உள்ளூராட்சி மன்றங்களில் ஏறாவூர் நகர சபை, ஏறாவூர்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை,
மண்முனைப்பற்று பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கே வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களில் 7 உள்ளூராட்சி மன்றங்களுக்கே வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
அதனடிப்படையில், வெருகல் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை, கோமரன்கடவல பிரதேச சபை, பதவி ஶ்ரீபுர பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை, திருகோணமலை நகரம் மற்றும் பட்டினமும் சூழலும், கிண்ணியா பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 உள்ளூராட்சி மன்றங்களில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாமல் ஓயா பிரதேச சபை, தெஹியத்தகண்டிய பிரதேச சபை, பதியத்தலாவ பிரதேச சபை, அக்கரைப்பற்று மாநகர சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, லாஹூகல பிரதேச சபை, ஆலையடிவேம்பு பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, நாவிதன்வௌி பிரதேச சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, காரைத்தீவு பிரதேச சபை ஆகியவற்றுக்க வேட்பு மனு கோரப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை மற்றும் ஹட்டன் – டிக்கோயா நகர சபைகளுக்கு வேட்பு மனு கோரப்பட்டுள்ளது.