பெண்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி அரசியல் பிரதிநிதித்துவமாகும்

0
555

பெண்களின் நீண்டகால போராட்டத்தின் காரணமாக தற்போது தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான சாதகமான அறிவுப்புக்கள் வெளிவந்துள்ளன

இதனை மாவட்ட பெண்கள் வலையமைப்பினர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்

.என சிரேஸ்ர சட்டத்தரணி திருக்குமரநாதன் தெரிவித்தார்.

பெண்களு;ககெதிரான வன்முறைக்களை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொரளிளல் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஐநாடுகள் சபையின் 16நாள் செயற்பாடுகள் தொடர்பான திர்மானத்திற்கிணங்க மாபெரும் மகாநாடொன்றை திருகோணமலை அலஸ்தோட்டம மாதுமையம்பாள் ; மகாவித்தியாலயத்தில் நடாத்தினர்.

இந்நிகழ்வில் சிரேஸ் சட்டத்தரணிகாளன எஸ்.திருக்குமரநாதன்,திருமதி.லக்ஷ்மி, அகத்தின் மாகாண இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம்,பிரதான பொலிஸ்நிலயபெண்கள்பிரிவு பொலிஷ்பரிசோதகர் திருமதி. ஜெஸ்மின் அடங்கலாக ;,பெண்கள்.சிறுவர் பிரிவு பொலிஸ்பிரிவினர் என அதிகளவிலான அதிகாரிகள் 400இற்கும் அதிகமான மாவட்டத்தைச்சார்ந்த பெண்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் கருத்துவெளியட்ட சிரேஸ்ரசட்டத்தரணி திருக்குமரநாதன் குறிப்பிடுகையில்,பெண்களின் நீண்டகால போராட்டத்தின் காரணமாக தற்போது தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான சாதகமான அறிவுப்புக்கள் வெளிவந்துள்ளன.

இதனை இங்கு பங்கு பெற்றியுள்ள பெண்கள் அறிந்து கொண்டு உங்களது பெண்களின் போராட்டங்களுக்கு அப்பிரதிநிதித்துவத்தையும் சாதகமாக பயன்படுத்தவேண்டும் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியமான தாகவுள்ளன.

பேண்களின் 30வீதமான பங்கு பற்றுதல் இல்லாமல் தேர்தலில் எந்தக்கட்சியும் பங்களிக்க முடியாது.

ஏனவே நீண்டகாலமாக பெண்களின் விடிவுக்காக சிறப்பாக போராடி வரும் பெணக்ள வலையமைப்பு இவ்விடயத்திலும் தமது சிறந்த தலமைத்துவத்தைக்கொண்ட உறுப்பினர்களின் பங்களிப்பையும் உறுதிப்படுத்தவேண்டும்.

அதனைப்பயன்படுத்தியும் உங்களது பெண்களின் விடுதலையை,பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இது ஒரு சிறந்த சந்தர்பமாகும். எனவும் சுட்டிக்காட்டினார். இங்கு பல்வேறு சட்ட நடமுறைகள் பற்றியும் சட்டத்தரணிகள் பலரும் விரிவுரைகளை வழங்கினார்கள்.