தேசிய நீர் வழங்கல் நலன் கருதி ருவிற்றர் குறுந்தகவல் சேவை

0
118

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி குறுந்தகவல் சேவை ஒன்றினை ஆரம்பித்திருக்கிறது.
இச்சேவையினை தங்களின் கையடக்க தொலைபேசியில் செயற்படுத்த F இடைவெளி, @@battiwater என டைப் செய்து 40404 என்னும் இலக்கத்திற்கு sms செய்யவும் (உதாரணம்:- F battiwater send to  40404).
மேலும் இத்தகவலினை ஏனைய தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களும் இச்சேவையின் பயனை பெற்றுக்கொள்ள துணை நிற்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதனுடாக மட்டக்களப்பு பிராந்தியத்தில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக ஏற்படும் நீர்த்துண்டிப்புஇ நீர் கட்டண விபரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட இதர தகவல்களை தங்களின் கையடக்க தொலைபேசி மூலம் உடனுக்குடன் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ. பிரகா~; தெரிவித்துள்ளார்.