மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு

0
1076

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு இன்று(27) திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

 

மாலை 6மணி 05நிமிடத்திற்கு மாவீரர்களின் பெற்றோர்கள் சார்பாக ஒருவரும், முன்னாள் போரளியும் பொதுச்சுடரினை ஏற்றியதுடன், துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முந்நூறுக்கு மேற்பட்ட சுடரினை மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, தமது உறவுகள், நிரந்தரமாக உறங்கி கொண்டிருக்கும் மண்ணை அணைத்து அழுதனர்.
இந்நினைவு நாளில் மாவீர்களின் பெற்றோர்களுக்கு, அவர்களது பிள்ளைகளின் நினைவாக தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த துயிலும் இல்லத்தில், தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பலநூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், மா.நடராசா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
2006ம் ஆண்டிற்கு பின்னர், இந்த வருடமே பலநூற்றுக்கணக்கான மக்கள் கூடி அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.