வடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று இரவு கடும் மழை

0
587

வடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று இரவு கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த பகுதிகளில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

வளிமண்டல குழப்பநிலை காரணமாக நாட்டில் மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் , தென் , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் நாளைய தினம் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் வரை கடும் மழை எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.