விபத்தில் பாடசாலை மாணவிக்கு பலத்த காயம்.

0
744

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தின் முன்பாக நடைபெற்ற விபத்தில் பாடசாலை மாணவியொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான சம்பவம் இன்று(24) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்விபத்தில் சிக்கி, பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மண்டபத்தடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலைவிட்டு வீடு திரும்பும் போது, கென்ரர் வாகனம் மோதியதிலே இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.