இலங்கைகக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள பாலத்தினை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை

0
411
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடலுக்கு அடியில் இருப்பதாக கூறப்படும் ராமர் பாலத்தை சேதப்படுத்தாத கொள்கையை பின்பற்ற இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது.
ராமர் பாலம் இருப்பதாக கூறப்படும் கடற்பரப்பை ஆழமாக்கி, கப்பல் போக்குவரத்து திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு அண்மையில் இந்த உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் இந்த திட்டத்தால் குறித்தப் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை கைவிடுமாறு இந்து மதம் சார்ந்த அமைப்புகள் பலர் தெரிவிக்கின்றன.
அத்துடன் சூழலியாளர்களும் இதற்கு எதிரான நிலைப்பாட்டையே முன்வைக்கின்றனர்.
இந்தநிலையில், குறித்த ராமர் பாலத்தை சேதமாக்காத கொள்கையுடன் செயற்படுவதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதை நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராமர்பால வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், இலங்கைக்கு பிரவேசிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை குறைவடைந்து பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.