கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனம் பெறவுள்ளோரின் விவரங்கள் வெளியீடு

0
407

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ள நிலையில், அவர்களின் பெயர் விவரங்கள், இன்று (23) வெளியாகியுள்ளதென, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனை, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் www.ep.gov.lk எனும் இணையத்தளத்தில் தற்போது பார்வையிடலாம்.

நியமனங்கள், திருகோணமலை ஏகம்பரம் மைதானத்தில் கிழக்கு ஆளுநர் தலைமையில் நாளை மறுதினம் (25) வழங்கப்படவுள்ளதாக, கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தெரிவித்தார்.