வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க சீனா அரிசி உதவி

0
346
வறட்சியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக சீனா 2750 மெடரிக் டொன் அரிசியை வழங்க முன்வந்துள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக  அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டத்திற்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் அரிசியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.
இந்த அரிசியை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இடர்முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதஷர்ன யாப்பா ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டீன் பெர்னாண்டோ ஆகிறோரிடம் இதன் ஒருதொகை  அரிசி இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷீயென்ககினால்; இன்று  .கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது 1000 மெற்றிக் டொன் அரிசி  கையளிக்கப்பட்டது.
இலங்கை;கு அரிசியை கையளிப்பது தொடர்பான உடன்படிக்கையும் இதன் போது கைச்சாத்திடப்பட்டது