கிழக்கின் பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீடசையில் 40 புள்ளிகளுக்கு மேல்பெற்றுக் கொண்ட அனைவருக்கும் நியமனம் வழங்கவேண்டும்.

0
564

கிழக்கின் பட்டதாரிகளுக்கான  போட்டிப்  பரீட் சையில்  40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை  வழங்க ஆளுனர் முன்வரவேண்டுமென கிழக்கின் முன்னாள்  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,

மாகாணத்தில் மூவாயிரத்து நூற்று 84 வெற்றிடங்கள் உள்ள நிலையில்அதனை நிரப்புவதற்கான அனுமதியும் உள்ள நிலையில் நியமனங்களை வழங்குவது கடினமானா விடயம் அல்லவென கிழக்கின் முன்னாள் முதல்வர் நசீர்அஹமட் சுட்டிக்காட்டினார்.

பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் புதன்கிழமை (22) வினவிய போதே  கிழக்கின் முன்னாள்  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பட்டார். தொடர்ந்தும்  கருத்து தெரிவித்த முன்னாள்  முதலமைச்சர் ,
தற்போது   பட்டதாரிகளுக்கான நியமன விடயத்தில்    சிலருக்கு அநீதியழைக்கும் வகையிலான  நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படுவதாக  அறியக் கிடைக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் முதலில்  5021  ஆசிரியர்  வெற்றிடங்கள் காணப்பட்ட  நிலையில்  வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட எமது  ஆசிரியர்களை  கடந்த 2016 ஆம் ஆண்டு  எமது  மாகாணத்திலேயே  நியமித்த  போது  4884 வெற்றிடங்களை  நாம்  நிரப்ப  வேண்டிய தேவையேற்பட்டது,
இதையடுத்து பட்டதாரிகள்  ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசாங்கத்துக்கு அளித்த அழுத்தம் மூலமும்  நாம்  மேற்கொண்ட  தொடர் முயற்சியினாலும்  எமக்கு முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளை  நியமிப்பதற்கான அனுமதியை  நாம்  பெற்றுக்  கொண்டோம்.
இதனடிப்படையில்  நாம் முதற்கட்டமாக 259  பட்டதாரிகளுக்கான நியமனங்களை கடந்த ஜூன் மாதம் வழங்கினோம்.
இந்நிலையில்  ஏனைய பட்டதாரிகளை நியமிப்பதற்கு இடம்பெற்ற போட்டிப்பரீட்சையில் 2600 பட்டதாரிகள் 40 புள்ளிகளுக்கு மேல்  பெற்றுள்ளனர்,
40 புள்ளிகளைப் பெற்ற சிலருக்கு மாத்திரம் நியமனங்களை  வழங்கி  ஏனையோரை புறக்கணிப்பதற்கான   நடவடிக்கைகள்  இடம்பெறுவது  ஒரு   போதும்  ஏற்றுக் கொள்ள  முடியாத விடயமாகும்.
எனவே  இவர்களுள் 1441 பேருக்கு  நியமனங்களை  வழங்குகின்ற போது மீதமுள்ள  ஆயிரத்து 159  பேருக்கான நியமனங்களையும் ஆளுனர் வழங்க வேண்டும்,
ஏனெனில் கிழக்கின்  மீதமிருக்கின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை த் தருவதாக தேசிய முகாமைத்துவத் திணைக்களம்  ஏற்கன வே  எமக்கு உறுதியளித்தது,
அதனடிப்படையில் ஆளுனருக்கு நிதியினை  பெற்றுக்   கொள்வதற்கான பணி மாத்திரமே, ஜனாதிபதியுடன் கதைத்து  நிதியினைப் பெற்றுக் கொள்வது  ஆளுனருக்கு கடினமானா காரியமல்ல,
ஆகவே  இந்த வருட  நிறைவுக்கு குறித்த பட்டதாரிகளுக்கான நியமனங்களை ஆளுனர் வழங்கி வைக்க வேண்டும்,
அது  மாத்திரமன்றி  பின்னர் எஞ்சியிருக்கும்  2025  வெற்றிடங்களுக்கும் விரைவில்  அனுமதியைப்  பெற்று பட்டதாரிகளை உள்ளீர்த்து நியமனங்களை விரைந்து வழங்க வேண்டும்.
அத்துடன் 35முதல்  45 வயதுக்கிடைப்பட்ட  பட்டதாரிகள் அனைவரையும் முதற்கட்ட நியமனங்களில் இணைத்துக்’ கொள்ள வேண்டும்,
ஏனெனில்  அடுத்து வரும்  நியமனங்களின்  போதும் 35 வயதுக்குட்பட்டவர்கள் மாத்திரமே  நியமிக்கப்பட போகின்றனர்,
எனவே  அவர்களுக்கு 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு இது இறுதி சந்தரப்பம் என்பதனால்  அவர்களை கட்டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும்,
நாம்  குறித்த  பட்டதாரிகளை கருத்திற்கொண்டே   கடும் முயற்சிகளை மேற்கொண்டு பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக மாற்றினோம்,
அத்துடன் அவர்களை  இம்முறை நியமனத்தின்  போது  கட்டாயம் உள்வாங்குவதற்கும்  உத்தேசித்திருந்தோம்,
எனவே  ஆளுனர் 35 முதல் 45 வயதுவரையான பட்டதாரிகளுக்கான நியமனங்களையும் முதற்கட்ட நியமனங்களின் போது வழங்க வேண்டும் என்பதுடன் இல்லாவிடின்  மீண்டும் கிழக்கில்  போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின் , அதற்கு ஆளுனரே  பொறுப்பேற்க வேண்டுமென கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.