தற்காலத்தில் அதிகமாக மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சனைகளாக காணி பிரச்சனைகள் உள்ளன

0
256

தற்காலத்தில் அதிகமாக மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சனைகளாக காணி பிரச்சனைகள் உள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பல்வேறு பிணக்கள் ஏற்படுகின்றது.

இச்செயலமர்வை நல்லமுறையில் பயன்டுத்தி மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சனைகளை தீர்க்க  கிராம மட்ட அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.

என வாகரைப்பிரதேசசெயலாளர்.கே.தனபாலசுந்தர் தெரிவித்தார்.நேற்றய தினம் பிரதேச செயலகத்தைச்சார்ந்த 83 பல்வேறு தரத்தைச்சார்ந்த  அடிமட்ட அதிகாரிகளுக்கு சட்டரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இச்செயலமர்வை இளைஞர் அபிவிருத்தி அகம் பிரதேச செயலகத்துடன் இணைந்து  ஏற்பாடு செய்துநடாத்தியது.இந்நிகழ்வில் ஆரம்ப உரையாற்றியபோதே பிரதேச செயலாளர் மேற்படி  கோரிக்கை யை விடுத்தார்.இந்நிகழ்வு அகத்தின் உதவி இணைப்பாளர் த.திலீப்குமார் தலமையில் இடம்பெற்றது. இங்கு உதவி பிரதேச செயலாளர்  ஏ.அமலனி மற்றும் முன்னாள் கிழக்குமாகாண காணி  ஆணையாளர் உள்ளிட்ட பலரும் கலந்தகொண்டதுடன் முன்னாள் கிழக்குமாகாண காணி  ஆணையாளர் க.குருநாதன் சட்ட விளக்கங்களை அளித்தார்.

இங்கு மேலும் பேசிய  பிரதேச செயலாளர் குறிப்பிடுகையில். கிராம மட்டங்களில் இவ்வாறான பிரச்சனைகளால் மக்கள் மத்தியில் பல்வேறு குளப்பங்கள் ஏற்படுகின்றன.

இக்காலத்தில் இச்செயலமர்வு நடாத்தப்படுவது மிகவும் பொருத்தமானதாகும்.காணிச்சட்டங்கள் தொட்ர்பான விளக்கங்களை கிராம உத்தியோகத்தர்கள்  நன்கு விளங்கி வைத்திருக்க வேண்டும்.

அதன்மூலம் போதிய அறிவைப்பெற்று பிரச்சனைகளை தீர்க்க உதவுவதுடன்.

அரச காணிகளையும் பாதுகாக்க உதவவேண்டும்.மட்டுமன்றி பாதிக்கப்பட்ட அடிமட்ட மக்களுக்கு சிறந்த சேவைய◌ாற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதனடிப்படையில் பொருத்தமான காலத்தில் இச்செலமர்வு அகத்தினால்  ஏற்பாடுசெய்து நடாத்தப்படுகிறது.‘தற்காலத்தில் அதிகமாக மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சனைகளாக காணி பிரச்சனைகள் உள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பல்வேறு பிணக்கள் ஏற்படுகின்றது.

இச்செயலமர்வை நல்லமுறையில் பயன்டுத்தி மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சனைகளை தீர்க்க  கிராம மட்ட அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.எனவும் தெரிவித்தார்.