மகிழடித்தீவு, முதலைக்குடா இறால்வளர்ப்பில் நீர் வாழ் உயிரினங்களை விருத்தி செய்ய நடவடிக்கை

0
880

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் நீர் உயிர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி நடவடிக்கையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோதல் நிலவிய காலப்பகுதிக்கு முன்னர் இறால் பண்ணையாக பயன்படுத்தப்பட்ட மட்டக்களப்பு மண்முணை  தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 500 ஏக்கர் காணியில் நீர் வாழ் உயிரினம் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதன்மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைப்பதுடன் பிரதேசத்தில் 900 பேருக்கு நேரடி தொழில்வாய்ப்பும் கிடைக்கவுள்ளது.

 

இதற்கமைவாக இந்த பிரதேசத்தில் 450 குளங்களை அமைப்பதன் மூலம் இறால், நண்டு ஆகியவற்றின் மூலம் வருமானத்தை பெற்றுக்கொள்ளமுடியும். இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை முதலீட்டுசபை ஊடாக வரி நிவாரண அடிப்படையில் இந்த காணிகளை வழங்குவதற்காக மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர வழங்கிய ஆவணங்களிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை துணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.