மூதூரில் மாணவர்கள் கௌரவிப்பு

0
425

திருகோணமலை மூதூர் அம்மன்நகர் வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளை 5ம் ஆண்டு புலமைப்பரிசில்பரீட்சையில்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் த.இராசதுரை தலமையில் இன்று காலை வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மிகவும் பின்தங்கிய கிராமமாத்தில் உள்ள மேற்படி பாடசாலையில் சிறந்த பெறுபேறகளை பெற்ற மாணவர்களை பிரதமவிருந்தினராக மூதூர் வலயபிரதிக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுதர்சன், மற்றும் இலங்கைத்தமிழ் ஆசிரியர்ச்கத்தின் பொதச்செயலாளர் சராபுவனேஸ்வரன் உள்ளிட்ட பல விருந்தினர்கள் கலந்துகொண்டு பல்வேறு பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.

இங்கு கற்பித்த ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் அதிகூடியபுள்ளிகளைப்பெற்ற மூன்று மாணவர்களுடன் விருந்தினர்கள் காணப்படவதiனையும் கலந்து கொண்ட பெற்றார் மற்றும்மாணவர்களையும் படங்களில்காண்க.

இங்கு வெட்டுப்புள்ளிக்குமேல் சிவரூபன் யுவேதனா 173,யொகசீலன் நிருத்திகா 171,பத்மசிறி றேனுஜா 153 ஆகியோர்பெற்றிருந்தனர்.(படங்கள்மூதூர்நிருபர்)