இளைஞன் வெட்டிக்கொலை – நடந்தது என்ன?

0
1009

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மாவட்டம்  கொக்கட்டிச்சோலைப் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட கற்சேனை – நீலண்ட மடு பிரதேசத்தில் திங்கட் கிழமை (20) இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..

கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த மகிழடித்தீவு எனும் கிராமத்தைச் சேர்ந்த சீவல் தொழிலாளர், அவ் வீட்டுத் தலைவனை அழைத்துள்ளார். அப்போது அவரது மனைவி ஏன் எனது கணவனை கூப்பிடுகின்றீர்கள் எனக்கேட்டுள்ளார். மேலும் குறித்த குடும்பத்தாரின் மகனிக் நண்பர்களும் அங்கு நின்றுள்ளார்கள் அப்போது நண்பர்களும், என் எனது நண்பனிப் தந்தையைக் கூப்பிடுகின்றீர்கள் என வினவியுள்ளார்கள்.

அதற்கு குறித்த சீவல் தொழிலாளர் சத்தமாக பேசியுள்ளார். இளைஞர்களும் என்ன அடிக்கப்போகின்றீர்களான என வினவியுள்ளனர். அதற்கு சீவல் தொழிலாழி அவர் கொண்டு வந்த துவிச்சக்கர வண்டியைத் தூக்கி ஒரு இளைஞனுக்கு அடித்துள்ளார். அதனைத் தடுக்கச் சென்ற மற்ற இளைஞனான வசந்தராசா டெனீஸ்காந்த என்பவருக்கு அவர் இடுப்பிலே மறைத்து வைத்திருந்த சீவல் தொழிலுக்குப் பயன்படுத்தும் கத்தியாhல் குத்தியுள்ளார். இவற்றi அவதானித்துக் கொண்டிருந்த அழகுதுரை அதீஸ்காந்தன் என்பவர் சீவல் தொழிலாளரான கொலையாளியைத் தடுக்க முற்பட்ட போது அவ்விளைஞனுக்கு கத்தியால் வயிற்றுப் பகுதியில் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

என இச்சம்மவத்தை நேரில் அவதானித்துக் கொண்டிருந்த இச்சம்பவத்தில் உயிரிழந்த மற்று காயப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு குற்றத்தடுப்புப் பிரிபு பொலிசார செவ்வாய் கிழமை (21) காலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு  விரைந்து பரிசோதனைகளையும், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.