தேசிய கொடி ஏற்ற மறுப்பிற்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே நடவடிக்கை

0
318

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கிணங்கவே வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஷ்வனின் விவகாரம் குறித்து தீரமானங்கள் மேற்கொள்ள்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.

வவுனியாவில் சிங்கள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஷ்வரன், தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் செய்தியாளர்கள் ஆளுநரிடம் பல்வேறு வினாக்களை முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த ஆளுநர் குறித்த விவகாரம் தொட்பில் சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் அவரின் ஆலோசனைக்கிணங்கவும் நடவடிக்கைக்ள முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.