கருடா கிருஸ்ண பக்தி கழகம் நிதி உதவி

0
389

“பத்தர்களின் காணிக்கையூடாக பக்த்ர்களுக்கே அறம் செய்து கலியுகத்தில் தர்மத்தை கட்டிக்காப்போம்” எனும் தொனிப்பொருளில் சந்திவெளில் மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வரும் கருடா கிருஷ்ண பக்தி கழகமானது பக்தியூடான சமூக நலன் சார் அறப்பணிகள், பொது நலப்பணிகளை முன்னேடுத்து வருவது வரவேற்க்கத்தக்க விடயமாகும் அந்த வகையில் 2017 ஆம் ஆண்டுக்குரிய பாரதூரமான நோய்களுக்கான  சிகிச்சைகளுக்கு நிதி அன்பளிப்புக்கான ஒதுகீட்டு திட்டத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த பிரதான வீதி சுங்கான்கேணி கிண்ணையடியை சேர்ந்த விவேகலாதன் – தனுக்ஷன் எனும் பதினாங்கு வயதுடைய சிறுவனுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மருத்துவ செலவுக்காக சந்திவெளி கருடா கிருஷ்ண பக்தி கழகமும் சந்திவெளி ஏரிக்கரை வீதி ஸ்ரீ மஹா விஷ்ணு நாககன்னி அம்மன் ஆலயமும் இணைந்து 19.11.2017 இன்று கழக அங்கத்தவர்களின் பங்ளிப்போடும் ஆலய பரிபாலன சபையினரின் ஆதரவோடும் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி வைத்தனர். அத்தோடு இச் சிறுவனின் சிறுநீரக சத்திரசிகிச்சை பரமாத்மாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளாசியோடும் கிருபையோடும் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் இடம்பெற்றமைக்கு இறைவனுக்கு நண்றி கூறியும் அடுத்த சத்திர சிகச்சையில் பரிபூரண சுகம் கிடைத்து அவரது கல்வியை தொடரவேண்டும் என்று பிராத்தனை செய்து நல்லுள்ளம் படைத்த செல்வந்தர்கள் இந்து தனவந்தர்கள் இவ் ஏழை சிறுவனுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து “இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்”  என்கிற மகுட வாசகத்துக்கு உயிர் கொடுப்போம் என்று வேண்டி நிற்க்கிண்றோம்.