பெற்றோல் தட்டுப்பாடு – வதந்தி பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

0
389

நேற்று மாலை இடம்பெற்ற வதந்தியின் காரணமாக பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பெற்றோல் தொடர்பில் தேவையற்ற பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த வதந்தியில் எந்தவித உண்மையும் இல்லை. காரணம், எம்மிடம் தேவையான எரிபொருள் கைவசம் உண்டு.

 

பொதுமக்களுக்கு தேவையான எரிபொருள் உள்ளிட்ட எரிபொருள்களை விநியோகிக்க தயாராகவுள்ளோம். நேற்று இரவு கொலன்னாவையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தேவைக்கேற்றவகையில் எரிபொருள் கொண்ட கப்பல் உரிய நேரத்தில் வரவுள்ளது.

 

இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை. தற்போதுசிலர் கான்களை எடுத்துக்கொண்டு எரிபொருள் நிலையங்களுக்கு சென்றுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எரிபொருளை விற்பனை செய்வது அங்கீகாரம் கொண்ட விற்பனையாளர்களுக்கு மட்டுமே உண்டு அதிகாரமற்ற விற்பனையாளர்களிடம் எரிபொருளை பெற்றுக்கொள்ளவேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறு எரிபொருளை கொள்வனவு செய்யும் போது ஏதாவது சம்பவம் ஏற்பட்டால் கூட்டுத்தாபனம் என்ற ரீதியில் எமக்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லை. தேவையான எரிபொருள் இருப்பதால் இவ்வாறு எரிபொருளை கொள்வனவு செய்யவேண்டிய தேவையில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

எரிபொருள் உரியவகையில் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. இதனால் இம்முறை வதந்தியை பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு வதந்தியை பரப்புவது சட்டவிதிகளுக்கு முரணானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.