இளைஞர்களின் எழுச்சி இமாலய வெற்றி

0
583

பல வருடங்களின் பின்னரும், நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு 2 வருடங்களின் பின்னர் உள்ராட்சி தேர்தல் நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. உள்ளூராட்ச மன்ற தேர்தல் கலப்புமுறைத்தேர்தலாக நடாத்தப்படவுள்ளதிலும் இழுபறி நிலை உள்ளது.
இவ்வாறு உள்ள நிலையில் கட்சிகளும் வேட்பாளர்களை நியமிப்பதில் அதிதீவிரம் காட்டி வருகின்றது. இதற்கிடையில் இளைஞர்ளுக்கு ஆசனம் ஒதுக்க வேண்டுமென்பதிலும் விடாப்பிடியாக உள்ளனர். இதற்கான முன்னுதாரண கலந்துரையாடல் பழுகாமம்  வட்டாரத்தில் பழுகாம இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

பழுகாமம் விளையாட்டு மைதானத்தில் பழுகாமம் கிராம அபிவிருத்தி சங்கங்கள், ஆலய தர்மகத்தாக்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டு கழகங்களின்  நிர்வாகிகள், நலன் விரும்பிகள் இணைந்து பழுகாமம் சார்பாக வேட்பாளர் யாரை நிறுத்துவது என்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. இதில் விநாயகமூர்த்தி ஆயுஷ்மனை வேட்பாளராக நிறுத்துவதாக ஏகமனதாக அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட வைக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.