பல்வேறு செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய கனரக அமைப்பு அங்குராப்பணம்

0
180
பட்டிருப்பு தொகுதி கனரக வானகன உரிமையாளர்களின் நலன் கருதி, கனரக வாகன உரிமையாளர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு பட்டிருப்பு வினாயகர் பாலர் பாடசாலை  மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் அங்குராப்பண நிகழ்வில் பட்டிருப்பு தொகுதியைச் சேர்ந்த கனரக வாகன உரிமையாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
  இச்சங்கம் ஆரம்பிக்கப்படுவதன் நோக்கம் யாதெனில் அண்மைக்காலமாக கனரக வாகனங்கள் மூலம் மணல் ஏற்றும் நடவடிக்கையின்போது பலதரப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்படட  நிலையில் தங்களது அன்றாட தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மற்றும் விலை கட்டுப்பாடின்றி மணலை கூடுதலான விலைக்கு மக்களுக்கு விற்பதனால் ஏழைமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிவருகின்றனர் இதுபோன்ற காரணங்களை கட்டுப்பாட்டுத்தும் நோக்கில் இச்சங்கம்  ஆரம்பிக்கப்பட்டுள்தாக சங்கத்தின் செயலாளர் தெரிவிததார்.
இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட சங்கத்தின் தலைவராக ஏஸ்.செல்வநாயகம், செயலாளராக கே.வதனகுமார், பொருளாளர், க.குகதாசன் உட்பட நிருவாக சபை உறுப்பினர்கள் 7 போர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்