அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் நீக்கப்படுவார்கள்

0
192
சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் திறைசேரியின் நடவடிக்கைகளை பாராளுமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் அனைத்து கடன்களும் செலுத்தப்படும் என்றும் பிரதமர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். கோப் குழுவின் தலைவர் வரவு செலவுத்திட்டத் தலைவர் ஆகியோரைப் போன்று அனைத்துக் குழுக்களின் தலைவர்களும் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை இருக்கவில்லை என்றும் பிரதமர் கூறினார்.
அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் நீக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் சமுர்த்தி நிவாரணத்தை அதிகரித்துள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தது போன்று எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மேலும் தெரிவித்தார்.