யாழ்த்தீபகம் கடலில் முழ்கப்போவதாக பரவும் செய்தி வெறும் யூகமே!

0
349

யாழ்த்தீபகம் கடலில் முழ்கப்போவதாக பரவும் செய்தி வெறும் யூகமே என்று யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி தெரிவித்தார்.

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு அவர் மேலும் இன்று தெரிவிக்கையில்,

 

விஞ்ஞான அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தீர்மானம் மேற்கொள்ளப்படும் .
மக்களினால் மேற்கொள்ளப்படும் அன்றாட நடவடிக்கை காரணமாகவே கடல் உள் வருகை நிகழ்கின்றது . மேலும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக அமைகின்றன.

 

தற்போது கடல்நீர் 12மீற்றர் தூரத்தில் நிலத்தை நோக்கி வருகின்றது. இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு யாழ்த்தீபகம் கடலில் முழ்கபோவதாக பரவும் செய்தி நிச்சயமானதாக கூறமுயாது என அவர் சுட்டிக்காட்டினார்.