ஆரையம்பதி சிவமணி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

0
516

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி சிவமணி வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று(15) வித்தியாலயத்தின் அதிபர் இ.வேல்சிவம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், வகுப்பு ரீதியாக முதல் நிலை பெற்ற மாணவர்கள், அதிகூடிய பாடசாலை வரவு, சிறந்த தலைமைத்துவம், பாடநூல் முறையாக பேணிய மாணவர்கள், சுத்தம்பேணிய மாணவர்கள் ஆகியோர் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹைதர் அலி மற்றும் கல்விசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.