வரலாற்றில் முதன்முறையாக கொக்கட்டிச்சோலையில் மாணவர் பாராளுமன்ற அமர்வு

0
1685

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு நேற்று(14) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற சபாநாயகர் பு.விதுசா தலைமையில் நடைபெற்ற அமர்வில், வித்தியாலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகங்கள்  மற்றும் சபை முதல்வர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அமர்வில் அமைச்சர்களினால்,
பாடசாலையில் கூட்டிறவு கடையினை அமைத்தல், பொது அறிவு போட்டியினை ஒழுங்குபடுத்தி நடாத்துதல், ஒழுக்கம் மற்றும் சமயநெறிமுறைகளை கடைப்பிடிக்க செய்தல், கணனி அறிவினை மேம்படுத்தும் பொருட்டு வாரத்தின் இறுதிநாளில் விசேட வகுப்பினை நடாத்துதல், மாணவர்களின் வரவினை சீராக்குதல், கரப்பந்து, உதைபந்து போன்ற விளையாட்டுக்களில் திறமையான மாணவர்களை தெரிவு செய்து பயிற்சி வழங்குதல், பூக்கன்றுகளை நட்டு பாடசாலை வளாகத்தினை அழகுபடுத்தல், இயற்கை முறையிலான விவசாயத்தினை பாடசாலையில் மேற்கொள்ளல், வீதிபோக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கும் பொருட்டு மாணவர்களுக்கு அது தொடர்பிலான செய்முறை பயிற்சினை வழங்குதல் போன்ற பிரரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் அவற்றிற்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.
மேலும், அடுத்து மாணவர் பாராளுமன்ற அமர்வு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டதை, தொடர்ந்து சபை நடவடிக்கைகள் கலைக்கப்பட்டன.
மாணவர் பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து, பெற்றோர்களிடம், மாணவர்கள் ஆசிர்வாதத்தினை பெற்றுக்கொண்டனர்.
இச்சபை நடவடிக்கைகளை மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஹரிகரராஜ், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான என்.தயாசீலன், எஸ்.சோமசுந்தரம் வேள்ட்விஸன் நிறுவன உத்தியோகத்தர்கள், கோட்ட அதிபர்கள், பாடசாலை சமூகத்தினர் ஆகியோரும் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.